உள்ளூர் செய்திகள்

தென்காசியில் குட்கா விற்ற தொழிலாளி கைது

Published On 2023-08-05 08:50 GMT   |   Update On 2023-08-05 08:50 GMT
  • குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக சலீம் அவற்றை பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
  • கைது செய்யப்பட்ட சலீமிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

தென்காசி:

தென்காசியில் கூலக்கடை பஜார் பகுதியில் உள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ள பாண்டி மற்றும் போலீசார் சரவணகுமார், அன்பரசன், சிவப்பிரகாஷ் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த தொழிலாளி சலீம் (வயது 43) என்பதும், அவர் குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக அவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் ரூ.41 ஆயிரம் ஆகும்.

Tags:    

Similar News