உள்ளூர் செய்திகள்

செயற்கை கால் தயாரிக்கும் கருவியை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் பார்வை.

மாற்றுத்திறனர் உதவி கருவி தினம் கொண்டாட்டம்

Published On 2022-11-05 10:05 GMT   |   Update On 2022-11-05 10:05 GMT
  • செயற்கை கால், கை தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
  • முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்–பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் துணை நிலையம் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.

இதில் பணிபுரியும் புரோஸ்டிக் மற்றும் ஆர்த்தோடிஸ்ட் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாற்றுத்திறனாளி நோயாளிகளுக்கு பல்வேறு துறை மூலமாக பயனீட்டார்களுக்கு பயனடையச் செய்துள்ளனர்.

இந்த நிலையில் உலக அளவில் செயற்கை உறுப்புப் பொருத்தல் மற்றும் மாற்றுத்திறனர் உதவி கருவி தினம் முதன் முதலில் இன்று கொண்டாடப்பட்டது.

அதன்படி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜி நாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால், கை தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இதுவரை 185 நவீன செயற்கை கை மற்றும் கால்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ–மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்–பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் முடநீக்கியல் துறை தலைவர்கள் குமரவேல், ராஜமோகன், நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், ஆர்த்தோடிஸ்ட் ரமேஷ் மற்றும் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News