தென்காசியில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
- காடுகள் தான் மனித உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குகிறது.
- யானை தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான விதைகளை விதைக்கிறது.
தென்காசி:
தென்காசியில் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்படி குற்றாலம் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்னண் மேற்பார்வையில், குற்றாலம் பிரிவு வனவர் பிரகாஷ் தலைமையில் ஆயிரப்பேரி கிராமத்தில் மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், காடுகள் தான் மனித உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குகிறது. சட்டத்திற்கு புறம்பாக யாரும் மின்வேலிகளை அமைக்கக்கூடாது. யானை தன்னுடைய வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான விதைகளை விதைக்கிறது. எனவே யானைகள் காக்கப்பட வேண்டிய விலங்குகளில் மிக முக்கியமான ஒன்றாகும் என்றனர்.
இதில் மதுரை கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, மாவட்ட அறிவியல் கழக தலைவர் சுரேஷ்குமார், தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நாட்டார் பட்டி முகேஷ் கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.