உள்ளூர் செய்திகள்

சோளத்தட்டு தட்டுப்பாட்டால் கால்நடை தீவன பற்றாக்குறை அபாயம்

Published On 2023-01-25 07:33 GMT   |   Update On 2023-01-25 07:33 GMT
  • விதைப்பு காலமான புரட்டாசியில் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது.
  • விவசாயிகள் சோளத்தட்டு, வைக்கோல் போன்றவற்றை வாங்கி இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

குடிமங்கலம் :

புரட்டாசி பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சோளத்தட்டு சாகுபடி செய்வர்.இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் பருவ மழை வெளுத்து வாங்கியது. ஆனால் விதைப்பு காலமான புரட்டாசியில் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது. புரட்டாசி இறுதி மற்றும் ஐப்பசி துவக்கத்தில் நல்ல மழை பெய்தது.

இதனால் விவசாயிகள் காலம் கடந்து சோளம் சாகுபடி செய்தனர். சோளம் சாகுபடி செய்ததிலிருந்து தொடர்ந்து மழை பெய்தது. மேலும் அறுவடைக்கு முந்தின பருவத்தில் பருவமழை விடைபெற்றது. இதனால் சோளத்தட்டு வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டது. வழக்கமாக மானாவாரியில் சோளம் விதைக்கும் விவசாயிகள் அதை சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துவர்.

தற்பொழுது அறுவடை துவங்கியுள்ளது. அறுவடை செய்யும் சோளப் பயிர்கள் ஆறு மாத தேவையை கூட சமாளிக்க போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த ஆண்டு கால்நடை தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனை சமாளிக்க பல விவசாயிகள் சோளத்தட்டு, வைக்கோல் போன்றவற்றை வாங்கி இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

Tags:    

Similar News