உள்ளூர் செய்திகள்

வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளை சந்தித்து பேசினர்.

ஓட்டப்பிடாரம் அருகே தரிசு நிலங்களை மேம்படுத்தும் பணி

Published On 2022-09-25 08:35 GMT   |   Update On 2022-09-25 08:35 GMT
  • 15 ஏக்கர் தேர்வு செய்த திடலில் மரப்பயிர் நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் கூறினர்.
  • தனிநபர் பட்டா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13500 வழங்கப்படும் எனவும் விவசாயிகளிடம் கூறினர்.

புதியம்புத்தூர்:

ஓட்டப்பிடாரம் அருகே கொடியங்குளம் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நில தொகுப்பு குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், வேளாண் துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் ஜெய செல்வின் இன்பராஜ், வேளாண்மை அலுவலர் சிவகாமி, வேளாண்மை துணை அலுவலர் ஜெயசீலன் உள்ளிட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் தரிசு நில தொகுப்பு விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 15 ஏக்கர் தேர்வு செய்த திடலில் போர்வேல் அமைத்து சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டு தொடர்ந்து மரப்பயிர் நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர். மேலும் அனைத்து பண்ணை குடும்பங்களும் 2 தென்னை மரம் விதம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினார்.

தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்து உளுந்து மற்றும் சிறுதானியம் பயிரிடும் தனிநபர் பட்டா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13500 வழங்கபடும் எனவும் விவசாயிகளிடம் கூறினர். இதில் கொடியங்குளம் கிராமத்தின் திட்ட பொறுப்பு அலுவலர் மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News