உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

சென்னையில், தஞ்சை மாவட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனையகம்- கலெக்டர் தகவல்

Published On 2022-08-17 09:24 GMT   |   Update On 2022-08-17 09:24 GMT
  • தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, சுவாமிமலை ஐம்பொன் சிலை உள்ளிட்ட 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றதாகும்.
  • தஞ்சை மாவட்டத்தின் புகழ் உலக நாடுகளுக்கு பரவட்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில்

கூறியிருப்பதாவது :-

தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சி யம் மட்டுமல்லபல்வேறு கலைகளின் வாழ்விட மாகவும், பிறப்பிடமாகவும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அதாவது தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் பெயிண்ட்ஸ், கருப்பூர் பெயிண்ட், கலைத்தட்டு, திருபுவனம் பட்டு, சுவாமிமலை ஐம்பொன் சிலை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, நெட்டி வேலைபாடுகள் ஆகிய 10 பொருட்கள் புவிசார் குறியீடுபெற்றது ஆகும்.

இந்த நிலையில் இந்த கலை களையும், கலைஞர்களை ஊக்குவி க்கவும், அவர்க ளை உலகம் அறியும் வகையில் செய்யவும் சென்னை அண்ணா நகர் வி .ஆர் .மாலில் முதல் கட்டமாக வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனையகம்- கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த தகவலை சென்னையில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு தெரிவியுங்கள். தஞ்சை மாவட்டத்தின் புகழ் உலக நாடுகளுக்கு பரவட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News