உள்ளூர் செய்திகள்

தஞ்சை பூச்சந்தையில் பூ மற்றும் பொறி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்கும் பொதுமக்கள்.

தஞ்சையில், பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2022-10-03 10:07 GMT   |   Update On 2022-10-03 10:07 GMT
  • ஒரு வாரத்துக்கு முன்பாகவே பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.
  • புதிதாக முளைத்த மஞ்சள் கொத்து, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை அன்று சிறிய கடைகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை கடவுள் படங்கள் முன்பு பொறி, அவல், சுண்டல், தேங்காய் பல்வேறு வகையான பழங்கள் வைத்து படையல் செய்யப்படும்.

பூசணிக்காய் உடைத்து வாழை, மாவிலை தோரணங்கள் கட்டப்படும்.

நாளை சரஸ்வதி பூஜையும் வருவதால் பெரும்பாலான வீடுகளில் சரஸ்வதி படம் முன்பு பூஜை பொருட்கள் வைத்து தீபாராதனை காண்பித்து சாமி கும்பிடுவர்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது புத்தகங்களை சரஸ்வதி படம் முன்பு வைத்து நன்றாக படிக்க வேண்டும் என்று வழிபாடு செய்வது வழக்கம்.

இதனால் தஞ்சையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.

இன்று தஞ்சையில் கீழவாசல், மானம்புசாவடி, தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது.‌ சாலை ஓரங்களில் ஏராளமான கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்தது.

புதிதாக முளைத்த கடைகளில் மஞ்சள் கொத்து, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது.

இதைவிட மற்ள கடைகளில் பொறி, சுண்டல், அவல், பூசணிக்காய், வாழை இலை, பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

காலையில் மிதமான அளவில் இருந்த பொதுமக்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.

இதனால் தஞ்சையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக கீழவாசலில் கூட்டம் அதிகரித்தது.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஆங்காங்கே ஏற்பட்டது.

இது தவிர பெரும்பாலான கடைகளில் சரஸ்வதி சாமி படமும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவற்றையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். பூஜை பொருள்கள் தேவை அதிகம் இருந்ததால் அவற்றின் விலையும் சற்று அதிகரித்தது. 

Tags:    

Similar News