வல்லத்தில், நாளை மாணவர்களுக்கான கடற்பசு தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி- கலெக்டர் தகவல்
- நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை வல்லத்தில் நடைபெற உள்ளது.
- மொத்தம் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகஅரசு வனத்துறை சார்பில் உலகில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும், தமிழகத்தில் தஞ்சை கடற்பகுதியில் இவ்வுயிரினம் கண்டறியப்பட்டு முதல் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டதையும், உலக கடற்பசு தினத்தை வருகிற 28-ந் தேதி கொண்டாடும் வகையிலும் மாவட்ட அளவி லான ஓவியப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான போட்டியானது நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளிகளில் பயிலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் முதல் பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 2-ம் பிரிவாகவும், கல்லூரி அளவில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 3-ம் பிரிவாகவும் வகைப்படுத்தப்ப ட்டுள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 3 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 3 பிரிவிற்கும் சேர்த்து மொத்தம் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
போட்டியில் பங்குபெறும் மாணவர்க ளுக்கு ஓவியம் வரைவதற்குரிய அட்டைகள் துறை மூலம் வழங்கப்படும்.
இதர வரைவு உபகரணங்கள் பென்சில், வண்ணக்க லவைகள் போன்றவற்றை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு விழா, இடம் முதலிய விவரங்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
தனித்திறமைகள் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி மேற்கொண்டு வருகிறார்.
அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு தொடர்பான ஓவியங்களை தீட்டி பரிசுகளை வெல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்து கொண்டு ஒளிர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.