தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று பணியாளர்கள் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தக்கூடாது.
- பொதுப்பணி நிலைத்திறனில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வேண்டும்.
தருமபுரி,
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடன், நகை கடன், மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன், தள்ளுபடி கூறிய தொகையினை வட்டியுடன் முழுமையாக வழங்க வேண்டும்.
ரேஷன் கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குழு அமைத்து தீர்த்திட வேண்டும். மேலும் கடன் தள்ளுபடியில் விதிமீறல், நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று பணியாளர்கள் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தக்கூடாது.
பொதுப்பணி நிலைத்திறனில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வேண்டும். ஓய்வூதியம் கருணை ஓய்வூதியம் அரசு ஆணைப்படி பணியாளர்களுக்கு உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.