உள்ளூர் செய்திகள்

நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி தொடக்க விழா நடந்தது.

நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி தொடக்க விழா

Published On 2022-12-31 09:46 GMT   |   Update On 2022-12-31 09:46 GMT
  • உரம் தெளித்தலின் முக்கியத்துவம் பற்றியும் அதனால் கிடைக்கும் கூடுதல் மகசூல் பற்றியும் எடுத்து கூறினார்.
  • விவசாயிகளுக்கு நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடியில் களை கட்டுப்பாடு பற்றி விளக்கம்.

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே உள்ள அண்டமி கிராமத்தில் வட்டார அளவிலான நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி முனைப்பு இயக்கம் வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் தலைமையில் நடைபெற்றது. நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் நோக்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்திகள் பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வம்பன் 8 ரகத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி டி.ஏ.பி.இலைவழி உரம் தெளித்தலின் முக்கியத்துவம் பற்றியும் அதனால் கிடைக்கும் கூடுதல் மகசூல் பற்றியும் எடுத்துக் கூறினார். அட்மா திட்ட அலுவலர் ராஜு ரைசோபியம் உயிர் உரம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார்.

தஞ்சாவூர் ஆர் வி எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் 11 பேர் அடங்கிய குழுவினர் விவசாயிகளுக்கு நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடியில் களைக் கட்டுப்பாடு பற்றி விளக்கம் அளித்தனர். அண்டமி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர்கள் குப்புசாமி, வெங்கடாசலபதி, ஞானசேகரன் மற்றும் சுமதி பாஸ்கர் ஆகியோருக்கு மானிய விலையில் உளுந்து விதையினை வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் வழங்கி தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்டமி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாஸ்கர் செய்திருந்தார். எனவே மதுக்கூர் வட்டார விவசாயிகள் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்கிற முன்னுரிமை அடிப்படையில் வேளாண் உதவி அலுவலர்களிடம் தங்களுடைய பெயர் ஆதார் எண் பரப்பு மற்றும் தேவையான உளுந்து விதை ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News