வேளாண் ஆராய்ச்சி நிலைய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
- பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பண்ணை தொழிலாளர் சங்க கூட்டம் வனிதா தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காட்டுத் தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
தினக்கூலி ரூ. 750 ஆக உயர்த்தப்பட வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக வேம்பு, செயலாளராக வனிதா, பொருளாளராக கிருஷ்ணவேணி, துணைத் தலைவராக பிரபாகரன், துணைச் செயலாளராக பரிமளா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், பண்ணை தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.