துறையூர் பள்ளியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
- சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.
- நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
மதிய உணவிற்காக சமையலர் கலா உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.
அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.
இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதம டைந்தன.
சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்,
இந்நிலையில் சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது துறையூர் நகராட்சி தொடக்கப்ப ள்ளிக்கு வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அது வரை தகர ஷெட் அமைத்து சமையலறை பயன்படுத்தப்படும் என ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர்.
ஆய்வின் போது நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் , நகர்மன்ற உறுப்பினர் முழு மதி இமயவரம்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.