உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பயணிகள் சேவை குழுவினர்.

நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவை குழு ஆய்வு

Published On 2022-07-18 09:32 GMT   |   Update On 2022-07-18 09:32 GMT
  • ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டதோடு 3 நடைமேடைகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
  • பயணிகளுக்கு உரிய ரசீது வழங்கவும், படைப்பு கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் விற்கப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை முறையாக குறிப்பிடவும் குழுவினர் அறிவுறுத்தினார்.

நெல்லை:

இந்திய ரெயில்வே வாரிய பயணிகள் சேவை குழுவின் தலைவர் சிவராஜ் கன்ஜி தலைமையில் குழு உறுப்பினர்கள் எட்டமனூர் ராதாகிருஷ்ணன், பொன் வி.பாலகணபதி ஆகியோர் அடங்கிய குழுவினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தனர்.

ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டதோடு 3 நடைமேடைகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

பயணிகளுக்கு உரிய ரசீது வழங்கவும், படைப்புகள் விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் விற்கப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை முறையாக குறிப்பிடவும் அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக இன்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள வந்த பயணிகள் சேவை குழுவினரை பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

Tags:    

Similar News