உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் இடங்களை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

மரக்கன்றுகள் நடும் இடங்கள் ஆய்வு

Published On 2023-10-31 09:07 GMT   |   Update On 2023-10-31 09:07 GMT
  • பூங்காக்கள், ஆற்றங்கரைகள், குடியிருப்பு பகுதிகள் என இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது
  • நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட நுண்ணுரங்களை பயன்படுத்துவதால் விரைவில் மரம் வளரும்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நடப்பாண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

இந்த பணியை நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்த உள்ளது.

கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்று வழங்கி பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர், மரக்கன்று நடும் இடங்களை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்:-

நகரை பசுமையாக்கவும், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், காற்று மாசுவை குறைக்கவும் இந்த ஆண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

இதற்காக பூங்காக்கள், ஆற்றங்கரைகள், குடியிருப்பு பகுதிகள் என இடங்கள் தேர்வு செய்ய ப்பட்டு வருகிறது என்றார்.

இதுகுறித்து பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்:-

பலன் தரும் மகாகனி, வேங்கை, மருது, நிழல் தரும் வேம்பு, புங்கன், முள்ளில்லா மூங்கில் கன்றுகள் நடப்பட உள்ளது.

நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட நுண்ணுரங்களை பயன்படு த்துவதால் விரைவில் மரம் வளரும்.

இப்பணியை சேவை அமைப்புகள், தன்னார்வ ளர்கள் மூலம் செய்யப்பட உள்ளது.

இதனால் நகரம் விரைவில் பசுமையாகும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.

நிகழ்வின்போது நகர்மன்ற உறுப்பினர் வசந்த், முன்னாள் கவுன்சிலர் ராமு, சமூக ஆர்வலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News