உள்ளூர் செய்திகள்

என்.எல்.சி. இந்தியா நிறுவன மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

என்.எல்.சி., சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் பேரணி

Published On 2023-06-28 07:37 GMT   |   Update On 2023-06-28 07:37 GMT
  • போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
  • விளையாட்டு மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் நாகராஜன் மற்றும் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை மருத்துவர் விஜயகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூர்:

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில், சர்வதேச போதை ப்பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில், நெய்வேலி பள்ளிகளைச் சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மற்றும் என்.எல்.சி. ஐ.எல். கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியை, நிறுவன மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மனித வளத்துறை இயக்குனருன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுகுமார், கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் நாகராஜன் மற்றும் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை மருத்துவர் விஜயகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், மத்திய நூலகத்தி லிருந்து தொடங்கிய இப்பேரணி, மகாத்மா காந்தி சிலை அருகில் நிறை வடைந்தது. பேரணியின் போது, மாண வர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.

Tags:    

Similar News