உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூர் பள்ளியில் உணவுத்திருவிழா

Published On 2022-12-15 09:52 GMT   |   Update On 2022-12-15 09:52 GMT
  • மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
  • மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளார் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் குத்துவிளக்கேற்ற, நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் ரிப்பன் வெட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கம்பு அடை, கேழ்வரகு அடை, முளைகட்டிய பாசிப்பயிறு, நவதானிய இனிப்பு உருண்டைகள், கொண்டைக்கடலை, சோள தோசை மேலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என 100-க்கும் மேற்பட்ட அறுசுவை உணவு வகைகள் மற்றும் 54 வகையான பழ வகைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த உணவுத் திருவிழாவில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையாளராக கலந்து கொண்டு தங்களுக்கான பிடித்த உணவை சுவைத்து உண்டு கண்டுகளித்தனர்.

சிறந்த முறையில் உணவு சமைத்து வந்த மாணவ, மாணவிகளுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் வழங்கினார்கள்.

விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஷ்வரி, குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

Tags:    

Similar News