வாகன சோதனையின்போது போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்கு
- போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கி ளில் ஹெல்மெட் அணி யாமல் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.அப்போது அந்த 2 வாலி பர்களும் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர்கள் போலீசாரை வசைபாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரி வித்திருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜாஹங்கிர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீ சாரிடம் ரகளையில் ஈடுபட்ட ஈத்தாமொழி பெரியகாடு தெற்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியம் (வயது 40), பெருவிளை பள்ளவிளை விநாயகர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (38) ஆகிய இருவர் மீதும் 2 பிரிவு களில் போலீ சார் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனை சட்டம் 294பி, 353 ஆகிய 2 பிரிவுகளில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.