தோவாளையில் கவிமணி மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை
- செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பிரச்சினையை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இம்மாத இறுதிக்குள் தானும் அந்த இடத்தை ஆய்வு செய்ய இருப்பதாகவும் உறுதியளித்தார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி சட்ட மன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சட்டமன்றத்தில் பேசியதாவது:-
குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வேண் டுமென்று கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.1 கோடி நிதி ஒதுக் கப்பட்டு அதற்கான வேலைகளும் முடிக்கக் கூடிய நிலையில், தனி நபரால் வழக்கு தொட ரப்பட்டு அந்த இடம் இந்து சமய மற்றும் அறநிலைய துறைக்கு சொந்த மானது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த இடத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் ஆய்வு செய்து அந்த இடம் அரசுக்கு சொந்தமென்று மணி மண்டபத்திற்கு ஒதுக்கினார்கள். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த இடம் அறநிலையத்து றைக்கு சொந்தமென தீர்ப்பு வந்திருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் என்னுடைய கிராமத்தில் ஆய்வு செய்ய வந்த போது மணி மண்டபத்தையும் ஆய்வு செய்தார். அங்குள்ள திருமண மண்டபத்தையும் ஆய்வு செய்தார்.
அப்பொழுது திருமண மண்டபத்திற்கான வாடகை ரூ.15 ஆயிரம் என நிர்ண யிக்கப்பட்டது. அதற்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த இடம் இப்போது அரசுக்கு சொந்தம். அறநிலையத்து றைக்கு சொந்த மானது என தீர்ப்பு வந்திருக்கிறது. எனவே அமைச்சர் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கிற்கு அப்பீல் செய்ய வேண்டும். அறநி லையத்துறையோடு ஆலோசித்து அந்த இடத்தி லேயே மணிமண்டபம் பணி களை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குமரி மாவட்டத்தில் துறையின் பணிகள் குறித்து ஆய்வு செய்கிற போது அந்த பிரச்சினை எனது கவனத்திற்கு வந்தது. முதல்-அமைச்சர் உத்தரவின் அடிப்படையில் கலெக்டர் கவனத்திற்கு எடுத்து சொல்லியிருக்கிறோம். நீதிமன்ற உத்தரவு இருக்குமானால் அந்த பிரச்சினையை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள், நானும் அந்த இடத்தை ஆய்வு செய்ய இருக்கிறேன் என்றார்.