உள்ளூர் செய்திகள்

பிரின்ஸ் எம்.எல்.ஏ.

மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

Published On 2022-12-06 08:07 GMT   |   Update On 2022-12-06 08:07 GMT
  • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
  • மத்திய அரசு கல்வி கடன் வழங்குவதில் கடும் நிபந்தனைகள், கெடுபிடிகள் விதித்து உள்ளது

கன்னியாகுமரி:

பிரின்ஸ் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

ஏழை, நடுத்தர மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், தொடர்ந்து உயர் கல்வி பயின்றிட பொருளாதார வசதியின்மையால் உயர் கல்வியை துறந்து விடு கின்றனர். இதனால் அம்மாணவர்களின் உயர் கல்வி லட்சியம், தனித்திறமை, ஆற்றல் ஆகியவற்றை சமுதாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

ஏழை பெற்றோர்கள் ஏழையாகவே இருந்து விடுகின்றனர்.இதனை போக்கும் வகையில் கடந்த காங். ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.ஏழை மாணவர்கள் படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்த பிறகு வங்கி கல்வி கடனை அடைத்து பயன் பெற்றனர்.

காங். ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்பட வில்லை. தற்போது மத்திய அரசு இந்த கல்வி கடன் வழங்குவதில் கடும் நிபந்தனைகள், கெடுபிடிகள் விதித்து உள்ளன. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் கூட நிதியுதவி இன்றி மருத்துவ கனவை சிதைத்து உள்ளனர்.சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ள னர். வழங்கப்பட்ட கட னையும் வசூலிக்க மத்திய அரசு தனியாரிடம் ஒப்ப டைத்துள்ளது. இது அபத்தமானது. கடன் வசூலிக்கும் தனியார் நிறுவனம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறது.

ஏழை மாணவர்களும் உயர் கல்வி பயின்றிட மத்திய அரசு கல்வி கடன் வழங்குவதில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும்.கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம் என கூறியி ருந்தார்.

மத்திய அரசு தள்ளுபடி செய்யாவிட்டால், மாநில அரசு கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைக்க பாதிக்கப்பட்ட மாணவர் களை திரட்டி காங். பெரும் போராட்டங்களை நடத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News