உள்ளூர் செய்திகள்

கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பயணியர் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்

Published On 2023-01-17 07:59 GMT   |   Update On 2023-01-17 07:59 GMT
  • சட்டபேரவையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதி இருக்கிறது.

கன்னியாகுமரி:

கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

கன்னியாகுமரி மாவட்டத் தில் மொத்தம் 6 சட்ட மன்ற தொகுதி இருக்கிறது.இதில் என்னுடைய கிள்ளியூர் தொகுதியில் சட்டமன்ற பயணியர் தங்கும் விடுதி கிடையாது. இங்கு முக்கிய மானவர்கள் நிறைய பேர் வந்து செல்கிறார்கள். அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதியிலும் பயணியர் விடுதி இல்லை.ஆகவே கிள்ளியூர் தொகுதியில் பயணியர் விடுதி, ஆய்வு மாளிகை அமைத்து தரு வார்களா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு. கூறியதாவது:-

தொகுதிக்கு தொகுதி ஆய்வு மாளிகை அல்லது சுற்றுலா மாளிகை அமைப் பது என்பது அரசினுடைய விதியில் இல்லை. பொது வாக மாவட்ட தலைநக ரங்கள், அதைபோல தாலுகா தலைநகரங்கள் போன்ற இடங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் தாலுகா தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் தான் சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் வருவது, தங்குவது அல்லது அமைச்சர் வரு வது, சட்டமன்ற உறுப்பி னர்கள் வருவது என்று இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.

அவர் சொல்வது மாவட்ட தலை நகரம் இல்லை. அடுத்த மாதம் நான் கன்னியா குமரி வருவதாக இருக்கி றேன். ஒருவேளை அது தாலுகா தலைநகரமாக இருக்கு மேயானால் நான் அங்கே வருகிற போது நேரடியாக நானே அவசியம் வந்து பார்க்கிறேன். அவசியம் இருக்குமேயானால், முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, அங்கே அதனை அமைப்பதற்கான முயற்சியை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News