உள்ளூர் செய்திகள் (District)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாகர்கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் வருகை

Published On 2023-01-27 09:33 GMT   |   Update On 2023-01-27 09:33 GMT
  • மேயர் மகேஷ் தகவல்
  • மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடம் ரூ.10கோடியே 50 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. அலுவலக பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்பொழுது காம்பவுண்டு கட்டுமான பணி நடந்து வருகிறது.

மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் கட்சி அலுவலகமும் புதுப்பிக்கப்பட உள்ளது. கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் மாநகராட்சி அலுவலகம் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து அழைத்தோம். பிப்ரவரி மாதத்தில் வருவதாக கூறியிருந்தார். தற்பொழுது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் மார்ச் முதல் வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வருகிற 30-ந்தேதி நேரில் சந்தித்து மாநகராட்சி அலுவலக கட்டிடத்திற்கான புக்லேட் மற்றும் கலைஞர் சிலை அமைப்பதற்கான புக் லைட்டை வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News