என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதல் அமைச்சர்"
- ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் நடந்தது
- பெண் கவுன்சிலர் வாயில் பிளாஸ்டிக் ஒட்டிக்கொண்டு எதிர்ப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் தலைவர் சுஜா தாவினோத் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் குடும்ப தலை விகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட் டத்தினை செயல்படுத்தியுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராணிப் பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத் திற்கு தேவையான நூல்கள் கொள்முதல் செய்ய விலை நிர்ணயக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பதிப்பகத்தாரர்கள், வெளியீட்டாளர்கள் மூலம் புத்தகங்கள் வினியோகம் செய்ய ரூ.10 லட்சம் செலுத்துவது, நகராட்சிக்கு சொந்தமான 16 கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாததால் வருவாய் ஆய்வாளர் மூலம் சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்து பொது ஏலம் விடவும், கடை வாடகை செலுத்தாதவர்கள் மீது கோர்ட்டு மூலம் வழக்கு தொடர்ந்து வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
26-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் ஜோதி சேதுராமன், தனது வார்டில் நீண்ட நாட்களாக வைக்கப்படும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை என கூறி தனது வாயில் துணியை வைத்து, அதன்மீது பிளாஸ் டிக்கால் ஒட்டிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்று நூதன முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
அப்போது எங்கள் வார்டில் மின்விளக்கு எரிவதில்லை, நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள 30 வார்டுகளிலும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்துத் தரப்படும் எனவும் மற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
- பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் கொள்கிறார்.
- குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.58 கோடி மதிப்பில் பல்வேறு கட்டமைப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் தலைமை யிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2021-ல் தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு புதிய திட்டங்களையும் தமி ழகத்தில் சிறப்பாக செயல்ப டுத்தி வருகி றார்கள்.
மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் மட்டுமன்றி, வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், தேர்தல் வாக்குறுதியிணை நிறைவேற்றிடும் பொருட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அதனையும் நிறைவேற்றியுள்ளார்கள்.
இதுபோன்று பொதுமக்களுக்கும், மாணாக்கர்களுக்கும் பயனுள்ள வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலு வலர் பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
- தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரி வித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வக்கீல், தி.மு.க. மாநில மாணவரணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி. இவர் தி.மு.க. செய்தி தொடர்பா ளராகவும் இருந்து வருகி றார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை 2.0 என்ற பெயரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதனை சிறப்பாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னி லையில் இரா.ராஜீவ் காந்திக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த நிலையில் நேற்று இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நினைவுப்பரிசை வழங்கி வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தார்.
மண்டபம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு) வாலாந்தரவை பிரவீன் குமார் (மத்திய), தேர்போகி முத்துக்குமார், (கிழக்கு), புதுமடம் நிலோபர் கான் உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல் தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.
- காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சர் உத்தர விட்டதற்கும், இந்தியாவி லேயே முன்மாதிரி திட்டமாக மாணவ, மாணவிகள் கல்வி தரத்தில் உயர வேண்டும் என்ற மேலான எண்ணத்தில் வரலாற்று சாதனை திட்டமான காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்த தற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி துணைத்தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடந்தது
- ஊராட்சி குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் காந்தி நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்திரயான்- 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியமைக்காக இஸ்ரோவிற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஆறுமுகம், அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
- ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் , கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தியும் கடந்த 268 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவ ட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக இன்று தஞ்சை வழியாக மயிலாடுதுறை செல்லும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சாலியமங்கலத்தில் வைத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் ஏராளமான விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், திருஆரு ரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடியும், அதேபோல் விவசாயிகளின் பெயரில் மோசடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் ரூ.300 கோடி கடன் பெற்றுள்ளது.
அந்த கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை உணவு விரிவாக்க திட்டத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
- இதன் மூலம் 53 ஆயிரத்து 375 மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் 16 பள்ளிகளிலும், கும்பகோணம் மாநகராட்சியில் 21 பள்ளிகளிலும் என 37 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2445 மாணவ- மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று ஏற்கனவே முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நாளை ( வெள்ளிக்கிழமை ) நாகை மாவட்டம் திருக்குவளையில் விரிவுபடுத்தப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதல் -அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் ,பேரூராட்சிகள், நகராட்சிகளில் உள்ள 1111 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், கும்பகோணம் மாநகராட்சி உடன் சேர்க்கப்பட்டுள்ள சுவாமிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 1112 அரசு தொடக்கப் பள்ளிகளில் 2-ம் கட்டமாக காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 53 ஆயிரத்து 375 மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.
இந்த திட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர்களை கொண்டு அந்தந்த சத்துணவு மையங்களில் காலை உணவு தயார் செய்து வழங்கப்பட உள்ளது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டி மீனவர்கள் நன்றி கூறினர்.
- மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொண்டி
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக ராமநாதபுர மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்று மண்டபத்தில் நடந்த மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மீனவர்கள் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை உயர்நீதி மன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியி னைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் முனைவர் எஸ்டியார் சீனிராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் ராமேஸ்வரம் வில்லாயுதம், துணை அமைப்பாளர் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் துணை தலைவர் பால் மாஸ், அமைப்பாளர் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார், ராமநாதபுரம் துணை அமைப்பாளர்கள் மலைச்சாமி, உப்பூர் துரை பாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோரப் பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
- ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திர மாலா, துணைத்தலைவர் தாஹிராபீவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காளீஸ்வரி, தினேஷ்குமார், செல்வி, ரவிச்சந்திரன், நாகராஜ், திருப்புல்லானி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி, துணை தலைவர் சிவலிங்கம், ஒன்றிய உறுப்பினர்கள் சரளாதேவி, ரஞ்சனி, பிரேமா, முனியாயி, சுமதி, நாகநாதன், பைரோஸ்கான், கமலா, கலாராணி, கோவிந்த மூர்த்தி, கருத்த முத்து, திருமுருகன், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஜெகத் ரட்சகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர் நாக நாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்ண ப்பன், கவிதா, சிவகாமி, கர்ண பூபதி, கமாலியா பேகம், மணிமேகலை, சாமிநாதன், திலீப்குமார், பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான்பீவி, துணை தலைவர் பிரோஸ்கான், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகப்ரியா ராஜேஷ்குமார், துணை தலைவர் கண்ணகி ஜெகதீசன், தேரிருவேலி ஊராட்சி மன்ற தலைவர் அபுபக்கர் சித்திக், துணை தலைவர் கலாதேவி சேதுராமு, வார்டு உறுப் பினர்கள் மேக வர்ணம், மருதுபாண்டியன், முத்துச்சாமி, ஞானசவுந்தரி, ராமர் செல்வி, கீதா, முருகேசன், சாந்தி, நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், துணை தலைவர் சண்முகராஜா, வார்டு உறுப்பினர்கள் பெருமாள், வள்ளி, சித்ரா தேவி, மல்லிகா, கார்த்திகா, சாந்தி, சிங்கராஜா, லெபன், தமிழரசன், அஸ்மா பேகம், செல்வராஜ்,
முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், துணை தலைவர் வயணப் பெருமாள், வார்டு உறுப்பினர்கள் பார்வதி, மாரியம்மாள், மீனாள், கருப்பணன், மோகன் தாஸ், நாகூர் மீரா, பாலுச்சாமி, சேகர், தனலட்சுமி, யுவ பிரியா, உம்முதர்தா, ஹிதா யத்துல் பானு, சுந்தரம்மாள், கொத்தங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத் தலைவர் வெங்கட சாமி, வார்டு உறுப்பினர்கள் பார்வதி, மும்தாஜ் பேகம், முத்துச்சாமி, கார்த்திக் ராஜா, ராஜா மேகலா, இந்திரா, மங்களேஸ்வரி, சுந்தரம்,
இதம்பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்கலசாமி, துணை தலைவர் தெய்வக்கனி, வார்டு உறுப்பினர்கள் கவுதமன், கனகசபாபதி, கவிதா, தங்கராஜ், மோகன்தாஸ், ஜரினா பீவி, சுலைகா பேகம், முனீஸ்வரி, அச்சுந்தன் வயல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம், துணை தலைவர் மரகதம், ஊராட்சி உறுப்பினர்கள் சித்ரா, ஜெயசித்ரா தேவி, இந்துமதி, அர்ஜூனன், சேதுமணி, காக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் (சகோ) ஜெயமணி, வார்டு உறுப்பினர்கள் சிவகுருநாதன், பெனாசீர் தான், மகமத் பேகம், ஒச்சம்மை, குணபாலன், தாய்லட்சுமி, சாந்தி, மரிய செல்வம், ஜெயமுருகன், குமாரக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணை தலைவர் விஜயநாதன், வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, ஜெ.ராஜேஸ்வரி, நாகஜோதி, காந்தியம்மாள், கிருஷ்ணன், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி புஷ்பவல்லி, துணை தலைவர் ராமலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் முத்துமாரி, அரியநாயகம், நல்ல தம்பி, கணேசன், தர்ம வள்ளி, பாஸ்கர சேதுபதி, கோமதி, முத்துலட்சுமி, முத்துக்குமார், மஞ்சுளா, பாத்திமுத்து, சீனி செய்யதம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
- மீன்கள் காட்சிக்கூடம், மகளிர் குழு கண்காட்சி அரங்கத்தை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.
- ரூ.70 கோடியே 76 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி–களை வழங்கினார்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடை பெற்ற மீனவர் நல மாநாட் டில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து–கொண்டு மீனவர்கள் மற் றும் மகளிர் சுயஉதவிக்குழு–வினர் என 13 ஆயிரத்த 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி–களை வழங்கினார்.
முன்னதாக மாநாடு நடைபெறும் கலோனியர் பங்களாவுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டிருந்த மீன்கள் காட்சி கூடம், மகளிர் மேம்பாட்டு நிறுவ–னம் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங் குகள்,
மகளிர் சுய உதவிக்குழுவி–னர் தயாரித்த கைவினை பொருட்கள் அரங்கு, சிறு, குறு தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
- கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,626 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விதமாக 1,739 மாணவர்க ளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ-மாணவி களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்ப டையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டில் 7,699 மாண வர்களுக்கும், 9,982 மாணவி களுக்கும் என மொத்த 17,681 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1207 மாணவர்கள், 1378 மாணவிகள், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 850 மாணவர்கள், 1191 மாணவிகள் என 4626 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) முத்துக்கழுவன், நகர்மன்றத் தலைவர்கள் சுந்தரலட்சுமி (அருப்புக்கோட்டை), குருசாமி(சாத்தூர்), ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர்கள் சசிகலா(அருப்புக்கோட்டை), நிர்மலா கடற்கரைராஜ்(சாத்தூர்) உள்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிகள், மாணவர்கள் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உட்பட 608 பேர் பங்கேற்றனர்.
- மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றிய திருப்பூர் மாவட்டம் 20வது இடம் பெற்றது.
திருப்பூர்:
மாநில முதல்வர் கோப்பைக்கான போட்டி சென்னையில் ஜூன் 30-ந்தேதி துவங்கியது. ஜூலை, 25 வரை ஒரு மாதம் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உட்பட 608 பேர் பங்கேற்றனர்.
துவக்கத்தில் வெற்றி புள்ளிகளை பெற்று முதல் 10 மாவட்டங்களுக்குள் இருந்த திருப்பூர் பின்னர் பின்தங்கியது. இருப்பினும் போட்டி நிறைவில் 38 மாவட்டங்கள் பட்டியலில் 20வது இடத்தை தக்க வைத்துள்ளது.
டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் ஸ்ரீ சைலேஸ்வரி, ஸ்ரீ சாஸ்தாயினி ஜோடி தங்கம், தனிநபர் பிரிவில் ஸ்ரீ சைலீஸ்வரி வெள்ளி வென்றார். பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பிரவந்திகா தங்கம், இரட்டை பிரிவில் பிரவந்திகா - பிரசித்தா ஜோடி தங்கம் வென்றனர். தனிநபர் பிரிவில் சுதன் வெள்ளி வென்றார்.
ஒற்றை சுருள்வாள் சிலம்பம் போட்டியில் சபரிநாதன் வெண்கலம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வைஷாலி வெண்கலம், அரசு ஊழியர் பிரிவில் சதுரங்க போட்டியில் நித்யா, பாஸ்கர் இருவரும் வெண்கலம் வென்றனர். மாநில போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றிய திருப்பூர் மாவட்டம் 20வது இடம் பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்