உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு ஆள்சேர்ப்பு முகாம்
- 108 ஆம்புலன்சு அலுவலகத்தில் 4-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
- ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 35 வயத்திற்குள் இருக்க வேண்டும்
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்சு அலுவலகத்தில் 4-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் இந்த தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள், உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும். மருத்துவ உதவியாளர் 19 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 35 வயத்திற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.