உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் திருப்பணி - ஆக்கிரமிப்பு தொடர்பாக 2 நாள் குறைகேட்பு கூட்டம்

Published On 2023-09-25 06:59 GMT   |   Update On 2023-09-25 06:59 GMT
  • அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறிக்கை
  • நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகம் (இருப்பு நாகராஜா கோவிலில்) வைத்து நடைபெறும்.

நாகர்கோவில் :

இந்து சமய அறநிலை யத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தாவது:-

நான் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பின் அறநிலையத்துறைக்கு சொந்தமான 490 கோவில்களை ஆய்வு செய்து நிறை, குறைகளை அறிந்து அமைச்சர் சேகர்பாபுவிடம் அறிக்கை சமர்பித்தேன். இதன் அடிப்படையில் கோவில்க ளுக்கு திருப்பணி கள் செய்திடவும், கும்பாபி ஷேகம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை துரிதப்படுத்தவும், மேலும் விளக்கமான குறைகள் கேட்டறியவும், ஆக்கிரமிப்பு ஆவணங்கள் பெற்றிடவும் பொதுமக்களிடம் மனுக்கள் பெற உள்ளோம்.

முதற்கட்டமாக நாளை (26-ந் தேதி) நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி, சுசீந்திரம், நாகர்கோவில், கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், தாம ரைக்குளம், மருங்கூர், பாணத்திட்டை, தளியல், கிருஷ்ணன் கோவில், பெருவிளை, பறக்கை, தெங்கம்புதூர், பேரம்பலம், ஏழகரம், வடிவீஸ்வரம், புரவசேரி, கோதிச்ச பிள்ளையகரம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் சம்மந்தமாக மனுக்கள் கொடுக்க, நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகம் (இருப்பு நாகராஜா கோவிலில்) வைத்து நடைபெறும்.

இதுபோல் நாளை மறுநாள் (27-ந்தேதி) பத்மநாபபுரம் தேவஸ்தனம் தொகுதிக்குட்பட்ட மண்டைக்காடு, வேளிமலை, வெள்ளிமலை, திருநந்திக்க ரை, பொன்மனை, மணலி கரை, பன்னிப்பாகம், மேலாங்கோடு, நீலகண்ட சுவாமி கோவில், திருவி டைக்கோடு, திருவி தாங்கோடு, சே ரமங்கலம், கரகண்டேஸ்வ ரம், ராதாகிருஷ்ணசன் கோவில், திருபன்னியோடு, வாள் வச்சகோஷ்டம் ஆகிய பகுதிகளுக்கு பத்மநாபபுரம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடை பெறும். இரு நாட்களும் மனு பெறும் நேரம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த வாய்பினை பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுள்ளப்படு கிறது.

இந்த முகாமில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News