ராணித்தோட்டம் டெம்போ முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் பங்கேற்றனர்
- போக்குவரத்து தொழிலாளர்கள் சிறு,சிறு குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
- அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு விடுப்புகள் மறுக்கப்படுவது கண்டன த்துக்கு உரியதாகும். அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதிலும் குளறுபடிகள் உள்ளது
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
நாகர்கோவில் மண்டலத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் மீது எடுக்கப்படும் பழி வாங்கும் நடவடிக்கையை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் உடனடியாக இயக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் பஸ் நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இது தொழிலாளர்களை நசுக்கும் செயலாகும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் சிறு,சிறு குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கடந்த 4 மாதமாக டி.ஏ. வழங்கப்படவில்லை. சம்பளத்துடன் சேர்த்து டி.ஏ. வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு விடுப்புகள் மறுக்கப்படுவது கண்டன த்துக்கு உரியதாகும். அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதிலும் குளறுபடிகள் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியம் வழங்காமல் பழி வாங்கப்படுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசினார்.அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜய குமார், தலைவர் சந்தனராஜ், பொருளாளர் ரமேஷ், பகுதி செயலாளர்கள் முருகேஸ் வரன்,ஜெய கோபால், ஜெவின் விசு, ஸ்ரீலிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்புச் செயலாளர் பச்சைமால், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தரநாத்,தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஆரல் வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் மற்றும் குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் நிர்வாகிகள் வெங்கடேஷ், ரவீந்திர வர்ஷன், ஆறுமுக ராஜா.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பிரைட் ஜேக்கப், ராணி தோட்டம் பணிமனை டிப்போ செயலாளர்கள் குமார், ராஜன், விஜய குமார், கனகராஜ், செட்டி குளம் டிப்போ ராஜன், கலைச்செல்வன், திருவட்டார் டிப்போ சதீஷ், ஜான் கிறிஸ்டோபர், திங்கள் சந்தை ராஜன், ஹரிஹரன், குளச்சல் செந்தில்குமார், இளங்கோ, சபாபதி, ரகுவரன், குழித்துறை பிரகதீஷ் ஜெபராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நாகர்கோவில் மண்டல விபத்து பிரிவு செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாகர்கோவில் மண்டல அலுவலக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவல கத்திற்கு உள்ளே இருந்து வாக னம் ஒன்று வெளியே செல்ல வந்தது. தொழிலாளர்கள் அந்த வாகனத்தை விட மறுப்பு தெரிவித்தனர். சிறிது நேரத்தில் வெளியே இருந்து அலுவலகத்திற்குள் அதிகாரி ஒருவர் தனது ஜீப்பில் செல்ல வந்தார்.அவரையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பி னார்கள். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.