லோக் அதாலத் முகாம் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு
- குமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்கும்
- கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற உள்ளது.
அப்போது நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்கு கள், குடும்ப நல வழக்குகள் மற்றும் குடும்ப பராமரிப்பு வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இந்த சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சியில் வழக்காளர்களை அதிகள வில் கலந்து கொள்ள வைக்கும் வகையில் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது.
சிறப்பு லோக் அதாலத் குறித்த விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அகண்ட எல்.இ.டி. திரை கொண்ட வாகனத்தில் ஒளிபரப்பும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் இன்று
நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அருள்முருகன் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறும் படத்தை ஒளிபரப்பு செய்யும் வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று சிறப்பு லோக் அதாலத் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நிகழ்ச்சியில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.