உள்ளூர் செய்திகள்

அன்றாட பணிகளை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

Published On 2023-08-13 06:43 GMT   |   Update On 2023-08-13 06:43 GMT
  • முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம்
  • கலெக்டர் அறிவுரை

நாகர்கோவில் :

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டா ரத்துக்குட்பட்ட நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி, இரவிபுதூர் அரசு தொடக்கப் பள்ளி, வழுக்கம்பாறை அரசு தொடக்கப்பள்ளி, குலசேகரபுரம் அரசு தொடக் கப்பள்ளி, மகாதானபுரம் அரசு தொடக்கப்பள்ளி மையங்களில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல் பாடுகளை செல்போன் செயலியில் மையப் பொறுப்பாளர் பதிவேற்றம் செய்வதை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 2-வது கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் இந்நிகழ்வினை தொடங்கி வைக்க உள்ளார்.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதை முன்னிட்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. சமையல் பணி, மாண வர்களுக்கு உணவு வழங்கும் பணி முடிவுற்றதை புகைப் படங்கள் வாயிலாக பதி வேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் முன்னோட்ட நிகழ்வு குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ள அனைத்து அரசு பள்ளிகளி லும் நடைபெற்று வருகிறது.

ஆய்வு நடந்த நல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 69 மாணவ, மாணவிகளும், இரவிபுதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 101 மாணவ, மாணவிகளும், வழுக்கம்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 114 மாணவ, மாணவிகளும், குலசேகர புரம் அரசு தொடக்கப்பள்ளி யில் பயிலும் 97 மாணவ, மாணவிகளும், மகாதானபுரம் அரசு தொடக்கப்பள்ளி யில் பயிலும் 57 மாணவ, மாணவிகளும் பயன்பெற உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பாபு, மகளிர் திட்ட இயக்குநர் பீபீஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கருணாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News