குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிப்பு
- கடந்த சில மாதங்களில் ரப்பரின் விலை ஒரு கிலோ ரூ.160 வரை இருந்தது. ஆனால் தற்போது விலை ஒரு கிலோ ரூ.129 என்று குறைந்து உள்ளது.
- தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாலும் அவதிப்படுகிறார்கள். அரசு உடனே தேங்கி இருக்கும் ரப்பர் சீட்டுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலையோர பகுதிகளில் தினமும் அதிக மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்ட மக்களின் முக்கியமான தொழில் ரப்பர் பால் வடிக்கும் தொழில் இங்கு உற்பத்தியாகும் ரப்பர் உயர்தரமான வகையை சார்ந்ததாகும். இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் இங்கு உள்ள ரப்பருக்கு விலை அதிகமாக இருக்கிறது. இதனால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் நல்ல வருமானம் வருகிறது.
தற்போது இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இங்கு உற்பத்தியாகும் ரப்பர் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி உள்ளது. கடந்த சில மாதங்களில் ரப்பரின் விலை ஒரு கிலோ ரூ.160 வரை இருந்தது. ஆனால் தற்போது விலை ஒரு கிலோ ரூ.129 என்று குறைந்து உள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாலும் அவதிப்படுகிறார்கள். எனவே அரசு உடனே தேங்கி இருக்கும் ரப்பர் சீட்டுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ரப்பர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.