உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் ரெயிலில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் சாவு

Published On 2022-07-18 07:26 GMT   |   Update On 2022-07-18 07:26 GMT
  • அப்போது சுமார் 72 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உள்ளார்
  • சாமி தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தினசரி பகல் நேர பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரெயில் காலை 7.05 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இன்று காலையும் ரெயில் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது.

அப்போது சுமார் 72 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். அதனை பார்த்த சக பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கள் விஜயகுமார், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.அப்போது மயங்கி விழுந்த முதியவர் இறந்து விட்டது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் இறந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் (வயது 72) என்பதும், இவர் சாமி தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாகர்கோவிலில்  ரெயில் பெட்டியில் முதியவர் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News