இரணியல் அருகே அம்மன் கோவிலில் தங்க நகை கொள்ளை
- இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி செந்தில் நடையை சாத்திவிட்டு சென்றுவிட்டார்.
- தங்க செயின் மற்றும் 2.5 கிராம் எடை கொண்ட தாலி சுட்டியையும் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே திங்கள்நகர் சுனைமலை யில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி செந்தில் நடையை சாத்திவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்துள்ளார். அப்போது கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகி ராமசாமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்று அம்மன் சிலையில் இருந்த 6 கிராம் எடை கொண்ட தங்க செயின் மற்றும் 2.5 கிராம் எடை கொண்ட தாலி சுட்டியையும் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ராமசாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.