போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கொட்டாரம் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்
- பேரூராட்சி செயல் அலுவலரிடம் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வலியுறுத்தல்
- அரசு போக்குவரத்து கழக பஸ்களை நிறுத்துவதற்காக ரூ. 1 ½ லட்சம் செலவில் பஸ் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலை மையில் கொட்டாரம் பேரூர் புதிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள செந்தில்குமார், கிழக்கு மாவட்ட பொதுச்செ யலாளர்கள் ராமச்சந்திரன், மாவட்ட துணைத்தலை வர்வின்சென்ட்,
கொட்டாரம் பேரூராட்சி வார்டுகவுன்சிலர்கள் இந்தி ராமேரி, கிறிஸ்டோபர் சந்திரமோகன், பேரூர் துணைத் தலைவர் பாபு ஆகியோர்கொட்டாரம் பேரூராட்சி செயல்அலு வலர் ராஜநம்பி கிரு ஷ்ணனை நேற்று நேரில்சந்தி த்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி-நாகர்கோவில்தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொட்டாரம்.அகஸ்தீஸ்வரம்வட்டா ரத்தின்தலை நகரமாக இந்தகொட்டாரம்ச ந்திப்பு விளங்கி வருகிறது.
கொட்டாரம்சந்திப்பு வழியாகதினமும்ஆ யிரக்கணக்கான பஸ், கார், வேன், லாரி டெம்போபோன்ற கனரக வாகனங்களும் மற்றும் இருசக்கர வாகனங்களும் கடந்து செல்கின்றன.
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசியநெ டுஞ்சாலையும் அகஸ்தீ ஸ்வரம் மற்றும் வட்டக்கோட்டைரோடும்சந் திக்கும்இடத்தில்கொட்டா ரம் பஸ் நிலையம்அமைந்து உள்ளது. இதனால் இந்த பஸ் நிலையம் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக திகழ்கிறது. இதனால் அடிக்கடி விபத் துக்கள் நிகழ்கிறது.
அது மட்டுமின்றி இந்த பஸ் நிலையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒருபுறமும்அரசு தொடக்கப்பள்ளி மறுபுறமும் அமைந்துஉள்ள தால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் இந்த பஸ் நிலையத்தை கடந்து செல்வதால் ஆபத்துடன் பயணிக்கும் நிலைமை இருந்துவருகிறது.
இந்த நிலையில் கடந்த 1996-ம் ஆண்டுஇந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு போக்குவரத்து கழக பஸ் களை நிறுத்துவதற்காக ரூ. 1 ½ லட்சம் செலவில் பஸ் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
ஆனால் இந்த பயணிகள் நிழற்குடை கட்டி 15 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.இதனால் இந்த பயணிகள்நிழற்குடைபயன் படுத்தப்படாமல்பாழ டைந்து வருகிறது.
போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கொட்டாரம் பஸ் நிலையத்தை கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது