உள்ளூர் செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம் - குருந்தன்கோடு, முன்சிறை ஒன்றியம் பகுதியில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Published On 2022-07-11 07:55 GMT   |   Update On 2022-07-11 07:55 GMT
  • தினமும் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது
  • 2100 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான குருந்தன் கோடு, முஞ்சிறை ஒன்றியத்தில் பலரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதைத் தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிக ரித்தது.பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கொரோனா சோதனையை தீவிர படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் தினமும் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று மாவட்டம் முழுவதும் 371 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்க ப்பட்டதில் 19 பேர் ஆண்கள் 28 பேர் பெண்கள் ஆவார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 20 ஆயிரத்து 822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தடுப்பூசி முகாமை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க ப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

2100 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள குருந்தன் கோடு, முன்சிறை, ஒன்றி யங்களில் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத் துறை அதிகாரிகள் முடுக்கி விட்டனர்.

இதையடுத்து அங்கு அதிகமான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குருந்தன்கோடு ஒன்றி யத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 232 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ள்ளது.

முன்சிறை ஒன்றியத்தில் 5 ஆயிரத்து 742 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் தோவாளை ஒன்றியத்தில் 2,217 பேருக்கும், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 3 ஆயிரத்து 27 பேருக்கும், ராஜாக்கமங்கலம் ஒன்றிய த்தில் 3,812 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

கிள்ளியூர் ஒன்றியத்தில் 2248 பேருக்கும், மேல்புறம் ஒன்றியத்தில் 3590 பேருக்கும், திருவட்டார் ஒன்றியத்தில் 3,261 பேருக்கும், தக்கலை ஒன்றியத்தில் 4572 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது .

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 2475 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதே போல் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 172 பேருக்கும், குலசேகரம் ஆஸ்பத்திரியில் 13 பேருக்கும், குளச்சல் ஆஸ்பத்திரியில் 10 பேருக்கும், கருங்கல் ஆஸ்பத்திரியில் 11 பேருக்கும், சேனவிளை ஆஸ்பத்திரியில் 15 பேருக்கும், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கும் தடுப்பூசி செலுத்த ப்பட்டுள்ளது.

நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 36,403 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ெமகா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியுள்ளனர். 16,831 பேருக்கு நேற்று ஒரே நாளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

மேலும் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 7587 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட வர்களில் 7557 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 36 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News