உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகை

Published On 2022-07-24 08:09 GMT   |   Update On 2022-07-24 08:09 GMT
  • கலெக்டர் அரவிந்த் தகவல்
  • ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒருவருடம் முடிவடைந்துள்ள அனைத்து வகை வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திற ளாளி பதிவுதாரர்களுக்கு பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம் பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் உதவித்தொகையாக 10 ஆண்டுகள் தொடர்ந்து தமிழக அரசால் வழங்கப் பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை இதுகாறும் காலாண்டு வாரியாக (3 மாதங்களுக்கு ஒருமுறை) கணக்கிடப்பட்டு பயனாளி களது வங்கி கணக்கில் வரவுவைக்கப்பட்டு வந்தது. மாற்றுத்திறனாளி பயனாளிகள் இந்த உதவித்தொகையினை மாதந்தோறும் பெற்று பயன்பெறும் வகையில் காலாண்டிற்கு ஒருமுறை வழங்குவதிலிருந்து விலக்களித்து மாதந்தோறும் வழங்குவதற்கு அரசால் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்திலிருந்து தற்போதைய அரசா ணைப்படி மாதந்தோறும் மாற்றுத்திறனாளி பயனா ளிகளின் வங்கி கணக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம், நாகர்கோவில் மூலம் உதவித்தொகை வரவு வைக்கப்படும். இந்த உதவித்தொகையினை பெற மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராகவே இருக்க வேண்டும். அரசிட மிருந்து வேறு எந்த வகை யிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுப வராக இருத்தல்கூடாது. கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது.

பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பயின்றுவரும் பதிவுதாரர்களுக்கும் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவ சாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர். நிவாரணம் பெற இயலாது. மேற்கூறிய தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ். மாற்றுக் கல்விச்சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலசு பதிவு அடை யாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வருகை தந்து உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை. 10 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்றுவரும் மாற்றுத்திற னாளி பயனாளிகள் இந்த உதவித்தொகையினை தொடர்ந்து பெறவேண்டு மானால் சுய உறுதிமொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News