மருந்துவாழ்மலையில் ஜோதிலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
- 16 வகையான வாசனைத்திரவியங்களால் அபிஷேகம் நடத்தப் பட்டது.
- சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிஅருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வ ரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தி னி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆனி மாத மகாசனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனைத்திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப் பட்டது.
அபிஷேகத்தை சிவாச்சா ரி யார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண் பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.