உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் இன்று 2-வது நாளாக கடல்நீர்மட்டம் திடீர் தாழ்வு

Published On 2022-08-27 08:13 GMT   |   Update On 2022-08-27 08:13 GMT
  • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
  • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

கன்னியாகுமரி:

இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

மேலும் கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் இன்று 2-வது நாளாக திடீரான தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து வெகு நேரமாகி யும் தொடங்கப்ப டாமல் இருந்தது.

இதனால் விவேகா னந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற் றத்துடன் கடற்கரையில் நின்றபடியே விவேகா னந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப் படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் சுற்றுலா பயணி கள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத் துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

Tags:    

Similar News