உள்ளூர் செய்திகள்

குடிநீர் தொட்டி அமைக்க வைத்திருந்த 100 கிலோ கம்பிகள் திருட்டு

Published On 2022-08-29 08:41 GMT   |   Update On 2022-08-29 08:41 GMT
  • விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தொட்டி அமைப்பதற்கு தூண் கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார்.
  • இதற்காக அங்கு இரும்புக் கம்பிகளை குவித்து வைத்திருந்தார். அதில் 100 கிலோ கம்பிகளை யாரோ வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் முளங்குழி முள்ளஞ்சேரி விளையை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 40). இவர் கொல்லஞ்சி வெட்டுக்காட்டில் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தொட்டி அமைப்பதற்கு தூண் கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார்.

இதற்காக அங்கு இரும்புக் கம்பிகளை குவித்து வைத்திருந்தார். அதில் 100 கிலோ கம்பிகளை யாரோ வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீகுமார் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி நுள்ளிவிளையை சேர்ந்த வில்சன் (47) ரதீஷ் (32) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News