உள்ளூர் செய்திகள்

தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா?

Published On 2023-06-28 07:06 GMT   |   Update On 2023-06-28 07:06 GMT
  • பாசன குளங்கள் வறண்டது
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 20.80 அடியாக சரிவு

நாகர்கோவில், ஜூன்,28-

குமரி மாவட்ட விவசாயிகள் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளின் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1500 ஹெக்டோரில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். பூதப்பாண்டி,அருமநல்லூர், சுசீந்திரம், சுங்கான் கடை, தக்கலை பகுதிகளில் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் நேரடி நெல் விதைப்பணியும் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் களை எடுக்கும் பணியிலும் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர்.

சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடைமடை பகுதி வரை தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பேச்சிபாறை அணை பாசனத்திற்காக கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு இன்றுடன் 28 நாட்கள் ஆகியும் கடைமடை கடை வரம்பு பகுதி வரை தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.

சானல்கள் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். தற்பொழுது சானல்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதனால் அணை களின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. பருவமழையும் பெய்யாமல் தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருவதால் அணை களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 20.80 அடியாக இருந்தது. அணைக்கு 27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் 36.49 அடியாக உள்ளது. அணைக்கு 487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 718 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 2 அணை களில் இருந்தும் வெளி யேற்றப்படும் தண்ணீர், தோவாளை சானல், அனந்தனார் சானல்களில் விடப்பட்டு வருகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.20 அடி யாகவும், மாம்பழத்துறையார் அணை நீர்மட்டம் 3.23 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் த ண்ணீரின்றி காணப்படுகிறது. பெரும்பாலான குளங்கள் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஆனால் மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் லேசாக மழை பெய்து வருகிறது.

மற்ற இடங்களில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் மழையை எதிர்நோக்கி வி வசாயிகள் காத்திருக்கி றார்கள். வருண பகவான் கை கொடுத்தால் மட்டுமே விவசாயம் செய்து உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயி கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News