திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று ஆராட்டு நிகழ்ச்சி
- திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
- ஸ்ரீ பூதபலி பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து தங்க கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பு திருவிழாக்கான பூஜைகள் நிறைவு பெற்றது.
கன்னியாகுமரி :
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி முதல் 6 நாட்கள் சிறப்பு திருவிழா புதிய தங்கமுலாம் பூசப்பட்ட 72 - அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி நடத்துவருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
நேற்று 5- ம் திருவிழாவில் சிறப்பு பூஜைகளும் இரவு 10 மணிக்கு சாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலின் ஈசான மூலையில் அரச மரத்தின் அருகே வேட்டை தளம் அமைக்கப்பட்டு அதில் பள்ளி வேட்டை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பரளியாற்று கடவில் சாமிக்கு ஆராட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
மதியம் 12 மணிக்கு கலாபிஷேகம், ஸ்ரீ பூதபலி பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து தங்க கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பு திருவிழாக்கான பூஜைகள் நிறைவு பெற்றது.