உள்ளூர் செய்திகள்

தகுதி உள்ள பொதுமக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

Published On 2023-11-03 08:25 GMT   |   Update On 2023-11-03 08:25 GMT
  • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
  • ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.

இரணியல்:

குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோசர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், முருகன், ரமணிரோஸ், ஏசு ரெத்தினராஜ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நலிந்த கழக மூத்த முன்னோடிகள் 24 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கிய கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாற்றுதல் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மற்றும் அதிக அளவில் கலந்து சிறப்பித்த இளைஞர்களுக்கும், ஒன்றியத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 104 வாக்கு சாவடி மையங்களிலும் கழகத்தால் நியமிக்க பட்டிருக்கும் வாக்குச்சாவடி பாக முகவர்கள் பி.எல்.ஏ.-2, வாக்குச்சாவடிபாக முகவர்கள் குழு உறுப்பினர்கள் பி.எல்.சி., ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், ஊராட்சி பொறு ப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் முழு அளவில் பணியாற்றி அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்க ளை வாக்காளர்க ளாக சேர்க்கும் பணிகளில் முழு மூச்சாக ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.

Tags:    

Similar News