உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் கொள்ளை வழக்கில் தேடப்பட்ட3 பேர் கோர்ட்டில் சரண்

Published On 2023-06-02 10:18 GMT   |   Update On 2023-06-02 10:18 GMT
  • தலைமறைவாகியுள்ள வாலிபரை பிடிக்க தனிப்படை தீவிரம்
  • குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் ஷாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் ஷாகிப்பை துப்பாக்கி காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையர்கள் பயன் படுத்திய காரை போலீசார் கைப்பற்றி னார்கள். கொள்ளை வழக்கு தொடர்பாக கோவில் பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகியபாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்ச ரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ் மீரான் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலை மறைவாகி இருந்த 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கேரளாவில் கொள்ளை யர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் அங்கு சென்று தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்சரக்கல்வி ளையை சேர்ந்த தர்வீஷ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை நீதிபதியை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தர விட்டார்.

இதையடுத்து 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள கோவில்பட்டியை சேர்ந்த சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள். கோர்ட் டில் சரணடைந்த மைதீன் புகாரி, ஷேக் முகைதீன், தர்வீஸ்மீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News