உள்ளூர் செய்திகள்

1,677 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-07-25 09:24 GMT   |   Update On 2022-07-25 09:24 GMT
  • 1,677 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது
  • 2,880 பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கரூர்:

கரூர் மாவட்டத்தில் 32-வது கொரோனா தடுப்பூசி முகாம் 1,677 மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி மற்றும் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர் குடியிருப்பு பகுதிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 12 -18 வயதுடையவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த வயதுடையவர்கள் இத்தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

இதில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் லட் சியவர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 153 பேர் முதல் தவணையும், 12,718 பேர் 2-ம் தவணையும், 20,727 பேர் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 33,598 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தலா 960 பேர், செவிலியர்கள், சுயஉதவிக்குழுவினர் தலா 480 பேர் என மொத்தம் 2,880 பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8,53,600 பேர் இதில் 8,12,088 பேர் என 95.14 சதவீதம் பேரும், 15,455 பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News