உள்ளூர் செய்திகள் (District)

கரூரில் நாளை இலவச சித்தா, ஓமியோபதி மருத்துவ முகாம்

Published On 2023-04-09 06:43 GMT   |   Update On 2023-04-09 06:43 GMT
  • கரூரில் நாளை இலவச சித்தா, ஓமியோபதி மருத்துவ முகாம் நடைபெறுகிறது
  • நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

கரூர்:

இந்திய மருத்துவம் மற் றும் ஓமியோபதித்துறை கரூர் மாவட்டம் சார்பில் மக்களைத்தேடி தமிழ் மருத்துவம் இலவச சிறப்பு சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ முகாம் நாளை (10-ந்தேதி, திங்கட்கிழமை) கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பழைய வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.இதுதொடர்பாக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலு–வலர் டாக்டர் எஸ்.காம–ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதா–வது:-

நாளை கரூர் மாவட்ட தலைமை சித்த மருத்துவ மனையில் இலவச சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, வயிற்றுப்புண், கோடை கால நோய்களான மூலம், பவுத்திரம், வைரஸ் காய்ச் சல், சிறுநீர் தொற்று, மலக்கட்டு, சளி, இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல், சைனஸ் பிரச்சினை,தூக்கமின்மை, மஞ்சள் காமாலை, மூட்டு வலி–கள், தைராய்டு நோய், பெண்களின் மாதாந்திர தீட்டு பிரச்சினை, கருப்பை–கட்டி, சினைப்பை நீர்க் கட்டி, அதிக உதிரப்போக்கு, நரைமுடி, முடி உதிர்தல், உடல் பருமன், குழந்தை–யின்மை இப்படி சகல நோய்களுக்கும் சிறப்பு பரி–சோதனை மற்றும் மருந்து–கள் இலவசமாக வழங்கப்ப–டும்.

கரூர் மாநகராட்சி ஆணையர், கரூர் அரசு மருத்துவ கல்லூரி டீன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்க உள்ளனர். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News