உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்

Published On 2023-04-04 08:44 GMT   |   Update On 2023-04-04 08:44 GMT
  • காசநோய் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது
  • ரத்த பரிசோதனை உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் நடைபெற்றது

கரூர்,

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி காந்தி மண்டபத்தில் பொதுமக்களுக்கு காச நோய் கண்டறிதல் குறித்த எக்ஸ்ரே பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் சரவணன் தலை மையில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரன், தமிழரசன், சுகாதார மேற்பார்வையாளர் சரண்யா மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.இதில் பொது மக்களுக்கு காசநோய் உள்ளதா என பரிசோதனை செய்யும் வகையில் காச நோய்குறித்த எக்ஸ்ரே பரி சோதனை வாகனத்திற்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு நுரையீ ரல், நெஞ்சு புகைப்படம் எடுத்து நுரையீரலில் சளி தொற்று உள்ளதா என்றும், காச நோய் உள்ளதா என் றும் பரிசோதனை நடை பெற்றது.அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு காச நோய் வராமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு பிர சாரம் செய்தனர் அதே போல் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத் தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை செய்து உடலில் ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர்.

Tags:    

Similar News