உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா
- ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
- குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ராம ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
மேலும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜைகள் நடைபெற்ற பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நகர செயலாளர் பாலாஜி , இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக், பாஜக மாவட்ட செயலாளர் பார்த்திபன், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.