உள்ளூர் செய்திகள்

தாங்கைகுளம் கரையோரமாக குலசை-சாத்தான்குளம் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-10-12 08:56 GMT   |   Update On 2022-10-12 08:56 GMT
  • உடன்குடி யூனியன் பொறியாளர் தயாரித்த ரூ.70 லட்சம் மதிப்பீடு செய்த, வழி, வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.
  • கருப்பட்டி என்றாலே அது உடன்குடி தான் என்கிற அளவுக்கு தனிச்சிறப்பு மிக்கது.

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதி விவசாய பொதுநல அமைப்பு மற்றும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், சமூக நல ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

உடன்குடி வட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாங்கைக்குளத்தின் கரையோரம் குலசேகரன்பட்டினம் - சாத்தான்குளம் இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.

(வெங்கட்ராமானுஜபுரம் செல்லாமல் நேர்வழி) உடன்குடி யூனியன் பொறியாளர் தயாரித்த ரூ.70 லட்சம் மதிப்பீடு செய்த, வழி, வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.

உடன்குடி அருகேயுள்ள தாங்கைத்குளத்தின் மேற்கு கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும்.

சமீபத்தில் புதிதாக அகலப்படுத்தி போடப்பட்ட உடன்குடி- தாண்டவன்காடு சாலையில் மீதமுள்ள சிவலூர் - ரெங்கநாதபுரம் சாலையில் மழைக்காலத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கும் என்பதால் உடனடியாக புதிய சாலை அமைத்து தர வேண்டும்.

உடன்குடி பஜார் நான்கு சந்திப்பிலிருந்து பிரிந்து செல்லும் இடத்தில் மழை நீர் தேங்கி பயணிகளை படாத பாடு படுத்துகிறது, அந்த சாலையை உயர்த்தி போட வேண்டும், கருப்பட்டி என்றாலே அது உடன்குடி தான் என்கிற அளவுக்கு தனிச்சிறப்பு மிக்கது.

மீண்டும் அந்த பெயரைக் காப்பாற்றிட எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News