உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிக்கு வந்தடைந்த மேட்டூர் அணை தண்ணீர்.

குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிக்கு மேட்டூர் அணை தண்ணீர் வந்தடைந்தது

Published On 2022-07-19 09:44 GMT   |   Update On 2022-07-19 09:44 GMT
  • நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  • மேட்டூர் கிழக்குகரை வாயக்காலில் தண்ணீர் வரும் போது, விவசாயிகள் நெல் சாகுபடி செய்வார்கள்.

பள்ளிப்பாளையம்:

மேட்டூர் அணை நிரம்பி–யதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடபட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெ–ருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் வாய்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் நேற்று வந்து சேர்ந்தது. இதனால் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இதன் மூலம் சடையம்பாளையம், வட்டமலை, தட்டான்குட்டை, ஜெய்ஹிந்த் நகர், ஒட்டன்கோவில், கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலன் பெறுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் எளையாம்பாளையம், களியனூர், சமயசங்கிலி, எலந்தகுட்டை, ஆலாம்பாளையம், தெற்குபாளையம், சின்னார்பாளையம், மோள கவுண்டம்பாளையம். மற்றும் பல பகுதிகள் விவசாயம் நிறைந்தவை.மேட்டூர் கிழக்குகரை வாயக்காலில் தண்ணீர் வரும் போது, விவசாயிகள் நெல் சாகுபடி செய்வார்கள்.ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இது, நேற்று பள்ளிபாளையம் பகுதி எல்லைக்கு வந்தது. வாய்க்கால் தண்ணீர் வந்ததால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News