உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

அன்னகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-10-21 10:24 GMT   |   Update On 2023-10-21 10:24 GMT
  • நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்றது.
  • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே திருக்காட்டுப் பள்ளியில் அன்னகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.

முன்னதாக கடந்த 19-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. பின்னர், காவிரி கரைக்கு தீர்த்தகுடம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.அதனைத் தொடர்ந்து, மாலையில் விக்னேஷ்வர பூஜைகள் நடைபெற்று கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டத்தில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி விக்னேஷ்வர பூஜை, கோ பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பி க்கப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடந்து, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, மூலவர் அன்னகாமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News