உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் ஆசிரியர் வசந்தா பேசினார்.

மகளிர் தினத்தை யொட்டி வேதாரண்யத்தில், இலக்கிய அமர்வு நிகழ்ச்சி

Published On 2023-03-14 08:57 GMT   |   Update On 2023-03-14 08:57 GMT
  • விழாவுக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.
  • பெண்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

வேதாரண்யம்:

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி இலக்கிய அமர்வு நிகழ்ச்சி வேதாரண்யம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை ஆய்வு மாணவி.சுகன்யா, சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தினமும் 120 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணித்து மீன் வியபாரம் செய்யும் பஞ்சவர்ணம், பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு, சிறுதானிய உணவு தயாரிப்பில் முனைப்பு காட்டும் கத்தரிப்புலம் சித்ரா ஆகியோர் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

இவர்களை அரசு கல்லூரி பேராசிரியர் மாரிமுத்து, சமூக செயல்பாட்டாளர் ஆசிரியை வசந்தா ஆகியோர் பாராட்டி பேசினர். மேலும், கல்லூரி மாணவி நித்யா, கோவி.ராசேந்திரன், ஆசிரியர் சதீஷ் உள்ளிட்டோர் பெண்ணியம் சார்ந்த பாடல்கள் பாடினர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் பிராபாகரன், கலை இலக்கிய பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் கைலாசம், மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, கார்த்தி, ஆசிரியர் சத்யராஜ், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வ ராசு, கிளை துணை செயலாளர் செந்தில்நாதன், மணி வண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

Tags:    

Similar News