இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 33 பேர் கைது
- மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மதுரை
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி மதுரை ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக புறப்பட்டு, மதுரை ெரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச் செயலாளர் நந்தாசிங் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.