திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும்
- திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜ்சத்யன் தலைமையில்அ.தி.மு.க.வினர் மனு அளித்துள்ளனர்.
- சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிடுவார்.
மதுரை
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கடந்த 21ம் தேதி தனியார் தொலைக் காட்சி யில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை கண் டித்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாநகர் காவல் துறை ஆணையரிடம் மண் டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் புகார் மனு அளித் துள்ளார்.அதில் அவர் கூறி யிருப்பதாவது:-
கடந்த 21 ஆம் தேதி தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோ னி மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளை விக்கும் வகையில் சென்னை திருவொற்றியூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் அதி காரிகளுக்கும், மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திண்டுக்கல் லியோனி மேடையில் பெண் களை தரம் தாழ்ந்து இழிவாக பேசி அதன் மூலம் பணம் சம்பா திக்கிறார்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து கொண்டு தமிழ கத்தின் நவீன சிற்பியாக இருந்த அம்மாவை விமர்சி ப்பது மிகவும் கண்ட னத்துக்குரியது. மாணவர்க ளுக்கு பாடத் திட்டத்தை வகுக்க கூடிய ஒருவரே ஆணா திக்கதுடன் பெண்களை தரைகுறைவாக பேசியி ருப்பது கடும் கண்ட னத்துக்கு உரியது.
அவரை கைது செய்ய வேண்டும் என்று காவல் துறை ஆணையரிடம் புகார் மனுகொடுக்கப்பட்டுள்ளது அரசு உடனடியாக பாட நூல் தலைவர் பதவியில் இருந்து அவரைஉடனே நீக்க வேண்டும்.
திருவள்ளுவர் சேர்ந்த தி.மு.க. பெண்மணி, தி.மு.க. வில் பெண்களுக்கு பாது காப்பு இல்லை, பெண்கள் நிம்மதியாக இல்லை என் பேசியது வலைதளங்களில் வந்துள்ளது.
இந்த ஆட்சியில் பெண் போலீஸ் கூட பாதுகாப்பு இல்லை பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் மாமுல் கேட்கின்றனர்.
வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் துடைப் பம் வைத்து சுத்தம் செய் வோம். அதுபோல தொடர்ந்து இது போன்ற இழிவாக குப்பைபோல் பேசினால் துடைப்பத்தால் அவருக்கு கழகத்தினர் வரவேற்பு அளிப்பார்கள்.
கடந்த மூன்று நாட்களாக லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கப் பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தி.மு.க.வினர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் பெண்களுக்கு எதிராக வார்த்தைகள் இருந் தால் போலீஸ் தானாகவே நடவடிக்கை எடுக்கலாம் என சட்டம் உள்ளது என அதையும் தெரிவித்துள் ளோம். எனவே திண்டுக்கல் லியோனி மீது வழக்குபதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்பொழுது மெட்ரோ ெரயில் திட்டத்தில் அம்மா பெயரை இருட்டடிப்பு செய்ததை கண்டித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண் டனத்தை தெரிவித்துள்ளார்.இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.